ஆடு மாடுக்கு கொட்டகை
ஆகாத வெயிலுக்கும்
அருமையா நிழல் கொடுக்கும்!
கோழிக் கூடோ தவறாம முட்டை தரும்
வளர்ப்பு பூனை அடுக்களை வரைவந்து போகும்
அடுப்பங்கரை கழுநீரெல்லாம்
மாடு குடிக்க உணவாகும்
காய்கறி கீரை என
சிந்துகின்ற கழிவுகளோ
கோழிகொத்தி தின்ன உணவாகும்
ஊருக்குள்ள சாக்கடையும் தேங்கமா ஓடிப் போகும்
கொசுக்கள் இல்லா ராப்பொழுது
தெரு முழுக்க தென்றல் தாலாட்டு பாட வரும்
தலைவாசல் படியெல்லாம் தலையணையாகி. விட.
வாசல்தான் படுக்கையாக சனங்களுக்கு தூக்கம் தரும்!
கால்நடைகள் இல்லாமல் கழிவெல்லாம் தங்க
கதவடைச்சு கொசு வலையடைச்சு
முடங்கிருச்சு ஊரு இப்போ!!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்