தெருவெங்கும் கிணறிருந்தது
மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது
வருணன் என்றொரு கடவுளை வணங்க
வற்றாமல் அது இருந்தது
சிறுமீனும் ஆமையும் அதிலிருந்தது
கிணற்று நீரும் தேன் போல் சுவையாயிருந்தது
கருக்கலும் விடியலும் பெண்கள் அங்கே
கூடிக் களித்திட இடம் கொடுத்தது
சிறுவர்கள் சிறுமியர் சேர்ந்து விளையாடிட
மகிழ்ந்திட அங்கே இடமிருந்தது
அருகம்புல்லின் மாலை சுமக்க
அரசமரத்தடி கோவிலும் இருந்தது
கருங்கல் மேடையில் இடைநில்லாது
ஆடும் புலியும் ஓடித் திரிந்தது
இப்படியாக இருந்த தெருதான்
இன்று அமைதியாய் தூங்கிக் கிடக்குது
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942