தொலைக்காட்சி

மந்திரப் பெட்டியில் மாட்டிக்கிட்டவன்

எத்தனை பேரடி – இந்த

விந்தை விலங்கினை வென்றிட எனக்கு

வழியைச் சொல்லடி

 

தந்திரமாகவே கதைகள் பலவும்

தினமும் பேசுது – இந்த

எந்திர உலகில் மனிதன் மனதை

ஏமாற்றி வாழுது

 

கலர்கலராய் காட்சியைக் காட்டி

கட்டிப் போடுது – ஒரு

கற்பனை தன்னில் வாழ்க்கையை அடைச்சி

காவல் வைக்குது

 

உலகம் முழுதும் சுற்றி வந்தே அது

உண்மையை பேசுது – அங்கே

உதவாத பல சோம் பேறிகளுக்கு

உற்ற துணையுமாகுது

 

நீண்ட தொடர்கள் நிதமும் காட்டி

தாண்டவமாடுது – அங்க

கண்ட கதையே வாழ்க்கை தான்னு

கனவு காணவைக்குது

 

சின்னஞ்சிறுவனும் சிரித்து மகிழ

நேரம் ஒதுக்குது – அதில்

சீரழியும் பாதையும் காட்டி நம்ம

பண்பாட்டைச் சிதைக்குது

– இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.