இன்று இமை விழித்துப் படிப்பதெல்லாம்
நாளை சுமை நீங்கி வாழ்வதற்கே – என்ற
சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு
பறைசாற்றியவர்கள் – நம் ஆசான்களே!
கரம் பிடித்து சிரம் தாழ்த்தி
எழுதப் பயிற்றுவிப்பவர்கள் மட்டுமல்ல
தரம் பிரியா கரம் நீட்டி உதவும்
மனித நேயத்தை போதிப்பவர்களும் நம் ஆசான்களே!
விலைகொடுத்து வாங்க இயலா அறிவை
விருப்போடு விதைத்துச் செல்பவர்கள் மட்டுமல்ல
மதம் நீங்கி மனிதம் போற்றும்
அறநெறியை தழைக்கச் செய்பவர்களும் – நம் ஆசான்களே!
பிணிபோக்கும் பணி செய்யும்
மருத்துவர்களை மட்டுமல்ல
துணிவோடு பணியாற்றும்
தேசப்பற்றாளரையும் உருவாக்குபவர்கள் – நம் ஆசான்களே!
விரல் நுனியில் மறைத்திருக்கும்
சிறுஅழுக்கை சுட்டிக்காட்டுபவர் மட்டுமல்ல
விண்வெளியில் மறைந்திருக்கும்
பெரும் அதிசயத்தை விளங்கச் செய்பவர்களும் – நம் ஆசான்களே!
மானிடன் போற்றும் ஆசானாய் மட்டுமல்லாமல்
மாணவன் போற்றும் நல் ஆசானாகவும் விளங்கும்
அனைத்து ஆசான்களுக்கும் – இனிய
ஆசிரியர் தின வாழ்த்துகள்…
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
கைபேசி: 6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!