துள்ளி ஆடும் வயதினிலே
கல்லறை ஏனோ தேடுவது?
கண்மூடி இதென்ன விளையாட்டோ?
கண்மூடித்தனமே இதுதானோ?
தனிமை என்றும் உதவாது
மனித உறவோடு பழகிவிடு
இயற்கை படைத்த ஆக்கை தன்னை
செயற்கை அழிவால் போக்குவதோ!
தள்ளிப் போடு சில நேரம்
நல்லதாகும் எதிர்காலம்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!