நல்ல நாள் – சிரிக்க சிந்திக்க‌

பட்டதாரி: ஐயா வணக்கமுங்க.
எனக்கு கைரேகை பாக்கோனும்.

சோசியர் : நல்லது. கைய‌ இப்படி கொடுங்க.

(சிறிது நேரம் பார்த்துவிட்டு)

           சரி என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க.

பட்டதாரி : ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்க.

சோசியர்: பொண்ணு பார்க்கவா?

பட்டதாரி: இல்லீங்க.

சோசியர்: வீடு கட்டவா?

பட்டதாரி: இல்லீங்க.

சோசியர்: தொழில் தொடங்கவா?

பட்டதாரி: இல்லீங்க.

சோசியர்: பொறவு… என்ன கேட்க வேண்டுமோ கேட்டு தொலையும்.

பட்டதாரி: அது வந்து TRB பரீட்சை எழுத Application போடோனும்… அதான் என்னைக்கு போட்டா வேலை கிடைக்கும் னு …. ஒரு நல்ல நாளா பாத்து சொல்லுங்க…..

சோசியர்: ஏமுல….. ஒரு படிச்சவன் பாக்கற‌ வேலையாமுல இது…. ஏல நல்ல நாளூ பாக்க நீ என்ன கல்யாணம் பண்ணவால‌ போற… பரீட்சை எழுததாம்ல போற… நாளைக்கே Application போடுல…

பட்டதாரி: நாளைக்கே நாள் நல்லாருக்குங்களா…

சோசியர்: ஏல கிறுக்கு பயலாம்ல நீ… நாளைக்கு application closing date ல

சுகன்யா முத்துசாமி

தந்தையுடன் சுகன்யா முத்துசாமி
தந்தையுடன் சுகன்யா முத்துசாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.