நல்வாழ்க்கைப் பெட்டகம்!

புத்தகம் என்ன‌ செய்யும்?
உன்னை மின்னச் செய்யும்

புதியதைப் பின்னச் செய்யும்
அறிவை உண்ணச் செய்யும்
புது உலகைப் பண்ணச் செய்யும்
வரலாறை அள்ளச் செய்யும்
வரலாறாய் உன்னைச் செய்யும்

வழிகாட்டியாய் உன்னில் செல்லும்
வழி மாறினால் விலக்கித் தள்ளும்
வழியெங்கும் விளக்கிச் சொல்லும்
வாழ்வெல்லாம் விடியல் துள்ளும்
வாழ்வினில் வெளிச்சம் அள்ளும்
வலிகளை வலிமையோடு வெல்லும்

புத்தகம் என்ன‌ செய்யும்?
நல்லன எல்லாம் செய்யும்!
படிப்போம் புத்தகம்
அதுவே நல்வாழ்க்கைப் பெட்டகம்…

கி.அன்புமொழி

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

கவிஞரின் படைப்புகள் தொகுப்பு