நவீனங்களை
முன்னிறுத்தியே
நகர்கிறது வாழ்க்கை!
நவீனத்துவம்
உள்ளும் புறமும்
உறைந்து கிடக்கிறது!
நவீனப் பறத்தல்
உருமாறி உருமாறி
உருவேற்றுகிறது
உலகத்தை!
நவீனங்களை
நகராமல் தின்றதில்
அழுது மடிகின்றன
பல பழமைகள்!
ஆராய்ச்சிகளின்
முன்னணி நவீனங்களை
அண்ணாந்து கடக்கிறது
ஆச்சரியப் பழமை!
மாற்றங்களின்
பின்னணியில்
வயோதிகத்தின்
தோற்றத் தடுமாற்றம்
அரங்கேறுகிறது!
காலச்சக்கரத்தின்
சுழற்சி நவீனங்களில்
கால் கடுக்க
கரைந்து போகிறது
கற்காலம் முதல்
தற்காலம் வரை!
பரிணாம நவீனங்களில்
அடுத்தடுத்து
நிகழ்கின்றன
நிற்கவியலா ஓட்டங்கள்!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!