நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு
உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு
காலும் நெடுக காத்து இங்கே
கஞ்சி சோறு வெச்சு, பல மணி நேரமாச்சு!
காலை போன காளை இன்னும் காணவில்லை!
ஏங்கி பார்த்து கண்ணு பூத்து போச்சு பாரு!
நாட்டு பய புள்ள பார்க்கவில்லை!
விவசாயி செய்யும் வேலை எண்ணத் தோணவில்லை!
சோத்தில் கையை வைக்கும் முன்னே எண்ணி பாரு
ஐயம் இல்லா விவசாயி என்று நல்லா!
நாடும் வளரும் நல்லா…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
மறுமொழி இடவும்