முகாந்திரமில்லா
பாத்திரங்கள்
பகர்கின்றன
பெருங்கதைகளை!
நெடும்
சங்கிலித் தொடர்களை
பரிசீலிக்க வெளிப்பட்டன
பாறைகள்!
முட்களிலும் பூக்களிலும்
மூழ்கி எழுந்தன
அந்தகார பிம்பங்கள்!
உருவுதலுக்கும்
வடிகட்டலுக்கும்
வழியில்லை!
பிழியப்படுகிறது
சாறு!
முடிச்சுகள் அவிழ்ந்தோ.
பூட்டுகள் திறந்தோ
புதைந்தவை புலப்படும்!
கடந்து கொண்டே போகையில்
கதவு தட்டும்
சத்தம்!
திறந்தால்
பாரமாகிறது வெளி!
இன்னும்
தினம் தினம்
இணைந்து கொண்டே
அமிழ்கின்றன
அடுத்தடுத்த
அத்தியாயங்கள்!
இறுதிவரை
நினவுக்குடையாய்
விரிந்து கொள்ள!
எஸ்.மகேஸ்
சென்னை
கைபேசி: 9841708284