நியாயங்கள் நிராகரிக்கப் படலாம் -ஆனாலும்
நிம்மதியை இழந்து விடாதே, நிமிர்ந்து நில்!
நேர்மையை நெறிபிறழச் செய்யலாம் – ஆனாலும்
நொந்து விடாதே, நிமிர்ந்து நில்!
அன்பை அமிழ்ந்துவிடச் செய்யலாம் – ஆனாலும்
அதளபாதாளத்தில் வீழ்ந்து விடாதே, நிமிர்ந்து நில்!
விடியல் தெரியும் விரைவில் – உலகினை நீ
வெற்றி கொள்வாய் நிமிர்ந்து நின்றால்!
– மு.அருண்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!