மூங்கில் காட்டில் தூங்கிக் கிடக்கும்
கீதம் தரும் வேய் குழல்
முட்களுக்குள் குடியிருக்கும்
முகம் சிவந்த ரோசாப்பூ
செங்கதிரின் வெம்மைதானே
நிழலின் சுகத்தை சுமந்திருக்கும்
சிவந்த நெருப்பின் தகிப்பில்தானே
வேகும் உணவின் ருசி மறைந்திருக்கும்
பொங்கும் கடல் மடியில்தானே
முத்துச் சிப்பி புதைந்திருக்கும்
புல்லில் வாழும் பனித்துளியில்
இப்புவியின் நகல் மிதந்திருக்கும்
இயற்கையில் இத்தனை அற்புதங்கள்
நமக்கென இங்கே இருக்கும் நிலையில்
செயற்கை பொருட்கள் சூழ்ந்த வாழ்வு
நிலைத்த இன்பம் தந்திடுமா?
துன்பம் தரும் நோயின்
பிடியை தடுத்திடுமா?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942