எப்போதும் உன்னை சுமக்கத்
தயாராகவே இருக்கிறேன் நான்…
இடமும் வலமும் முன்னும் பின்னும்
நீ தான் விலகிப் போகிறாய்…
அமரும்போது மடியமர்த்திப்
படுக்கும் போது நீ
பாயாய்க் கிடந்து தாங்குகிறாய் …
தத்தித் தவழ்ந்து ஓடியாடி
முற்றும் திரிந்து நீ
பாடை பயணத்திலும் எனக்கு முன்னமே
படுத்துக் கொள்கிறாய் …
என்னுடனே மண்மூடிக் கொள்ளும் குழியில்
என்னால் எத்தனை புழுக்கம் உனக்கு…
விலாவிலிருந்து உன்னை தைக்கவில்லை
என்றாலும் விலகாமல் நிற்பது
நின் பெருமை நிழலே…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250