அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு போராடி உலகையே மாற்றியவர் காந்தியடிகள்.அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவே இல்லை. ஆனால் காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றியமைக்காக மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
1948 ஆம் ஆண்டு ஜனவரியில் காந்தி கொல்லப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன் அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ‘உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பரிசு வழங்கப்பட வேண்டும்’ என்ற விதி இருந்ததால், அவருக்குக் கொடுக்க முடியாது போய்விட்டதாம். அவ்வருடம் தகுதியான வேறு எவரும் இல்லை எனக் கூறி எவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை.
இது குறித்து நோபல் பரிசுக்குழு கூறுகையில், “காந்திக்கு நோபல் பரிசு தராதது மிகப்பெரிய தவறு. அதற்காக நாங்கள் வருந்துகிறோம்” என்று கூறியுள்ளது. இதனால், காந்தியடிகளுக்கு இழுக்கொன்றுமில்லை. கொடுக்கப்பட்டிருந்தால் நோபல் பரிசுக்குக் கெளரவமாக இருந்திருக்கும்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!