கொட்டும் மழையில் நனைந்து பார்த்தேன்
ஒன்னும் புரியல…..
கொளுத்தும் வெயிலில் காய்ந்து கிடந்தேன்
ஒன்னும் புரியல….
எட்டா மலையில் ஏறிப் பார்த்தேன்
ஒன்னும் கிடைக்கல ….
எங்க தான் கிடைக்கும் என்று
எனக்கும் தெரியல…
சட்டெனத் தென்றல் தழுவிய போதும்
மாற்றம் ஏதுமில்லை …
பாயும் அருவியின் அருகில் சென்றபோது
மாற்றம் ஏதுமில்லை…
நெட்டை மரங்களில் ஏறியும் கூட
எதுவும் தெரியல…..
நான் எழுதிட பாட்டு எங்கே கிடைக்கும்
எனக்கு புரியல….
சுட்ட மண்ணே நீரை சுமக்கும்
எப்படி புரியல ….
சூரியன் மறைந்து நிலவு தோன்றிடும்
சூட்சுமம் புரியல…
வெட்டிய மண்ணில் விதைகள் முளைப்பது
எப்படி தெரியல ….
வெறும் வார்த்தையை கோர்த்து
பாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…
கைபேசி: 9865802942