பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 75 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 8 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2019-ஆம் வெளியிடப்பட்ட பார்மசி கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் ஜாமியா ஹாம்டார்ட், டெல்லி 78.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பார்மசி கல்லூரிகளின் தரவரிசை

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி, நீலகிரி 63.17 8
2 அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர் 57.76 12
3 எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 56.69 14
4 ஸ்ரீ ராமச்சந்திர கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 53.68 20
5 பி.எஸ்.ஜி. பார்மசி கல்லூரி, கோயம்புத்தூர் 44.38 37
6 பார்மசி கல்லூரி, சென்னை மருத்துவ கல்லூரி, சென்னை 41.63 47
7 வில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் ஸ்டடிஸ், சென்னை 40.63 52
8 ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் சயின்சஸ் நிறுவனம், கோயம்புத்தூர் 38.75 58

 

இந்திய அளவில் தமிழக பார்மசி கல்லூரிகள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.