பிடிஎஃப் ட்ரைவ்.காம் (pdfdrive.com) பாதுகாக்கப்பட்டப் பன்னூல் நூலகம்.
அனைவரும் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில், பல கோடி நூல்களோடு காத்துக் கொண்டிருக்கிறது.
சில நூறு நூல்களைக்கூட வைப்பதற்கு இல்லங்களில் தற்காலத்தில் இடவசதியும், அதைப் படிக்கும் கால நேரங்களும் இல்லாத நிலையில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
இச்சமயத்தில், இதுபோன்ற தளங்கள் மிகப்பெரும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து விதமான, அனைத்து மொழிகளிலும் காணப்படும் இவ்வகை நூல்கள் நமது அறிவையும் சிந்தனைகளையும் தேவை களையும் நிறைவு செய்யும் படியாக இருக்கின்றன.
இலக்கியம் எனும் பகுதியில், உள்நுழைந்தால், அங்கு இன்னும் நிறைய துணைத் தலைப்புகளோடு பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை நாம் சொடுக்கினால் அந்தந்தப் பகுதிக்கான நூல்கள் பிரிக்கப்பட்டு வகுக்கப்பட்டு காணப்படுகின்றன.
தலைப்பைத் தெரிந்து கொண்டு மிக எளிதாக உள்நுழைந்து அந்த நூல்களை நாம் பெற்றுவிடலாம். இது ஒரு மிகச்சிறந்த எளிய வழியாகும்.
பல மில்லியன் நூல்களில் நாம் தேடுகிற நூலைத் தேடுபொறியில் பதிவிட்டும் பெறலாம். இந்த இணையதளத்திற்குள் செல்வதற்கு நாம் ”உள்நுழைக” பகுதியில் நமது தகவல்களை அளித்து நமக்கென்று ஒரு கணக்கை வைத்துக் கொள்ளலாம்.
மிகப் பயனுள்ள இணையதளம் இவை என இத்தளத்தைக் கூறலாம். ஒவ்வொரு பெரும் பகுதியிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் பிடிஎஃப் வடிவில் காணக் கிடைக்கின்றன.
அதை நாம் நமது கணினியில் அல்லது தொலைபேசியிலோ பதிவிறக்கம் செய்து எப்போது ஓய்வு கிடைக்கிறதோ அப்போது படித்துக் கொள்ளலாம். இது இக்காலத்தின் தேவையாக இருக்கிறது.
இத்தளத்திலுள்ள பெரும்தலைப்புகள்
ஆசிரியர் தேர்வுகள்
மிகவும் பிரபலமானவை
கல்வி
கலை
வாழ்க்கை வரலாறு
வணிகம் மற்றும் தொழில்
குழந்தைகள் மற்றும் இளைஞர்
சுற்றுச்சூழல்
புனைகதை மற்றும் இலக்கியம்
உடல்நலம் மற்றும் ஆரோக்கியம்
வாழ்க்கை முறை
தனிப்பட்ட வளர்ச்சி
அரசியல் & சட்டங்கள்
மதம்
அறிவியல் மற்றும் ஆராய்ச்சி
தொழில்நுட்பம்
போன்ற தலைப்பின் கீழ், பல மில்லியன் புத்தகங்கள் இங்குள்ளன.
அவை, நமக்கு எதாவது ஒரு சமயத்தில் தேவைப்படும் நூலாகவும் இருக்கலாம்.
இது போன்ற அறிவுக்களஞ்சியங்கள் பணச்செலவின்றி உதவுமானால் நமது அறிவினை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்திக் கொள்ளலாம்.
இந்தத் தளம் குறித்து, விளக்கத்தினை அவர்கள் மொழியில் நாம் பெறும் போது, ”PDF டிரைவ் என்பது ஒரு இலவச தேடுபொறி, இது உங்கள் சாதனங்களில் மில்லியன் கணக்கான PDF கோப்புகளைத் தேட, முன்னோட்டமிட மற்றும் பதிவிறக்க அனுமதிக்கிறது.
எங்கள் தரவுத்தளத்தில் PDF கோப்புகளைச் சேர்க்க எங்கள் வலைவலங்கள் தொடர்ந்து உலகளாவிய வலையை ஸ்கேன் செய்கின்றன.
PDF கோப்புகள் வலையிலிருந்து திரும்பப் பெறப்பட்டால், அவை உடனடியாக PDF இயக்கக தேடல் முடிவுகளிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.
இந்த வழியில், எங்கள் PDF டிரைவ் நூலகம் புதுப்பித்த நிலையில் உள்ளது, அதே நேரத்தில் தொடர்ந்து வளர்ந்து, தேட ஒரு மகத்தான தரவுத்தளத்தை உங்களுக்கு வழங்குகிறது.
பாரம்பரிய தேடுபொறிகளுக்கு கூடுதலாக, PDF இயக்ககத்தில் இந்தக் கூடுதல் அம்சங்கள் உள்ளன:
முன்னோட்டங்கள் எல்லா கோப்புகளிலும் கவர் புகைப்படங்கள் உள்ளன, இது நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது.
மேம்பட்ட வடிகட்டுதல் PDF கோப்புகளை அவற்றின் பக்க எண், வெளியீட்டு தேதி, கோப்பு அளவு மற்றும் / அல்லது புகழ் மூலம் வடிகட்டி வரிசைப்படுத்தலாம்.
வேகமாக PDF கோப்புகளைத் தேட மில்லி விநாடிகள் மட்டுமே ஆகும்.
புதுப்பித்த நிலையில் உள்ளது PDF இயக்ககத்தின் காப்பகம் தொடர்ந்து மற்றும் திறமையாக புதுப்பிக்கப்படும் போது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
ஒத்திசைக்கப்பட்டது எந்தவொரு கோப்பின் அதே PDF பதிப்பையும் உங்கள் கணினி அல்லது இணைய இணைப்பு கொண்ட மொபைல் சாதனங்களிலிருந்து அணுகலாம்.
உங்கள் ஆர்வங்கள் மற்றும் சமீபத்திய தேடல்களின் அடிப்படையில் PDF டிரைவ் பரிந்துரைகளை வழங்குகிறது.” என்பதாக அறியலாம்.
கணினி மயமான காலத்தின் கொடையாக, pdfdrive.com நமது தேவைகளை மிக எளிதாகப் பூர்த்தி செய்கிறது.
(இணையம் அறிவோமா? தொடரும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!