பிப்ரவரி 14 என்றதும் காதலர் தினம் என்று அனைவரும் புளகாங்கிதம் அடையும் வேளையில், ஒரு காதல் கொண்ட பெண்ணின் மனது எப்படி இருக்கும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைக்கும் கவிதை.
காதலன் முதலில் பாட, அதற்குக் காதலி பதில் சொல்லும் வகையில் அமைந்த இந்தக் கவிதை எல்லாக் காதலர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கவிதை.
அம்மாடி உன் பார்வை பட்டா போதும்
ஆயுசு நூறு என்றே மாறிப் போகும்
சும்மாயில்ல மூத்தவங்க சொன்ன பேச்சும்
சுட்டுடத்தான் செய்யுதடி காதல் மூச்சும்
வம்பு நீயும் செய்ய வேண்டாம் சின்னமாமா
வாய்காலில் ஓடும் தண்ணி இல்ல மாமா
எம்மனசில் யாரும் இப்ப இல்ல மாமா
எதை சாட்சியாக்கிக் காட்ட வேணும் சொல்லு மாமா
நம்ம தெரு வேப்பமரம் சாட்சியாகும்
நாலுகாலு மண்டபமும் உண்மை பேசும்
கம்மாக்கரை அய்யனாரு குதிரை வரும்
கைகோர்த்து திரிந்த கதை சொல்லிப் போகும்
அம்புலிய தேடிப்போன அந்த வயசு
ஆட்டமெல்லாம் பேசுறயே என்ன கணக்கு
பொம்பளையாய நானும் இப்ப வளர்ந்தாஞ்சு
போக்கத்த பேச்சும் இப்ப உனக்கு எதுக்கு
என் மாமன்மகள் தோளில் மாலை போடணும்
இந்த மண்ணில் காதல் தோற்றிடாத நிலை வரணும்
அம்மம்மான்னு ஊரும் கோடி வாழ்த்துப் பாடணும்
அஞ்சாறு புள்ள குட்டி பெத்துப் போடணும்
நம்பி வாரேன் உன் காதல் உண்மைதான்னு
நம்ம சேர்த்து வைக்க நாலு பேரக் கேட்டுப்பாரு
தெம்போட என் வீட்டில் பொண்ணு கேளு
தேதி 14-ல் அதைச் செஞ்சு காட்டு
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!