புதிர் கணக்கு – 25

அடுத்த‌ புதிரைக் குயில் குப்பு கேட்டது. ஒரு காட்டில் இரண்டு வகையான மரங்கள் இருந்தன. முதல் வகை மரங்கள் இரு மலர்கள் உடையவை. அடுத்த வகை மரங்கள் நான்கு மலர்கள் உடையவை.

இருமலர்களையும் நான்கு மலர்களையும் கொண்ட மரங்களில் மொத்த மலர்களின் எண்ணிக்கை நூறு என்று வந்தால் ஒவ்வொரு வகையிலும் எத்தனை மரங்கள் இருக்கும் என்பதே அது கேட்ட கேள்வி.

ஆமாம். அதற்கான விடையைக் கொக்கு குமரன் சொல்லிவிட்டதே!” என்றது மயில்.

அதுதான் இல்லை. அந்த விடை கூடச் சின்னான் சொல்லிக் குமரன் கொக்கு சொன்னது தான்” என நடந்ததை வெட்ட வெளிச்சமாக்கியது வெளவால் வாணி.

அதற்கான விடை என்ன? மயில் கேட்டது,

அதற்கு இரு மலர்களுடைய மரங்கள் 10 என்றால் 20 மலர்களும் நான்கு மலர்களுடைய மரம் 20 என்றால் 80 மலர்கள் என்றும் ஆக

10 மரங்களில் 2 வீதம் 20 மலர்கள்

20 மரங்களில் 4 வீதம் 80 மலர்கள் ஆக

30 மரங்களில் 100 மலர்கள்

என்று விடை சொன்னது குமரன் கொக்கு, என்றது வெளவால் வாணி.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)