அனைவருக்கும் முன்பாக வந்து நின்ற செஞ்சிவப்புக் கிளிபேச ஆரம்பித்தது. “நான் கேட்கும் புதிர் மிகவும் சுலபமான சிறு கணக்கேயாகும். இது எங்கள் நாட்டுச் சிறுவர்கள் விளையாட்டாகக் கூறும் கணக்குகளில் ஒன்று.”
அதாவது எட்டு ஒன்பதுகளை பயன்படுத்தி 100 விடையாக வருமாறு செய்ய வேண்டும். செய்து பார்த்துச் சரியான விடையைக் கூறுங்கள் பார்ப்போம்” என்று தனது கணக்கைச் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டது அது.
அனைத்து உள்ளுர் பறவைகளும் தரையில் எதையோ எழுதிப் எழுதிப் பார்த்தன. சிட்டுக்குருவி சின்னான் கூட முயற்சி செய்து கொண்டிருந்தது.
சிறிது நேர அமைதிக்குப் பின்னே சிட்டுக் குருவி சின்னான் எழுந்து கூறிய பதிலைக் கேட்டதும் செஞ்சிவப்புக் கிளியும் அது சரியான விடையென ஒப்புக் கொண்டது.
“இவ்வளவு சுலபமான விடையை நான் நினைச்சுக் கூட பார்க்கவில்லையே!” குருவி குறுமணி ஆச்சரியப்பட்டது.
“இந்தப்பொடியனைப் பாரேன். உடனே விடை சொல்லிடுறான்” என்று மயில் மாதவி வியந்து சின்னானைப் பாராட்டியது.
புதிருக்கான விடை
புதிரைச் செஞ்சிவப்புக் கிளி கூறியது. அது 9 என்ற எண்ணைப் பயன்படுத்தி 100 வருமாறு செய்ய வேண்டும் என்று கேட்டது.
999 / 999 + 99 = 100 என்ற வகையில் இயலும் என்றது சிட்டுக் குருவி சின்னான்.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
Comments
“புதிர் கணக்கு – 35” அதற்கு 2 மறுமொழிகள்
அருந்தமிழ்க் கவித்தேனிசைப் பாட்டு
விருந்தோடருந்தினேன் கேட்டு
நறுமலர்ப்பூ மலர்வாசக் கூட்டு
நறுமணப் பூமலர் வாசக்கூட்டு