செங்கதிர் தழுவல் பூமியின் எழல் என
சந்திக்கும் இக்கணம் நமக்கு சிறப்பென
முந்தைய தலைமுறை சொன்னதை மறந்து
முழுசூரியன் காணா முகங்களே இன்று…
முழுமதி சுகமும் முழுதாய் மறந்து
அலைபேசி… தொலைக்காட்சி… அடுத்தபடி
கிரிக்கெட்டு ஆகாத டாஸ்மாக்கு என
வாழ்வினைத் தொலைத்து…
பாழாய்ப் போனதை மீட்டெடுக்க வர வேண்டும்
புது விடியல்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942