அடுப்பங் கரையில் பூனைக்குட்டி
அயர்ந்து தூங்குது பூனைக்குட்டி
துடுப்பை எடுத்தால் பூனைக்குட்டி
துள்ளிப் பாயுது பூனைக்குட்டி
காலைச் சுற்றுது பூனைக்குட்டி
கதவில் ஏறுது பூனைக்குட்டி
பாலைத் திருடுது பூனைக்குட்டி
பரணில் பதுங்குது பூனைக்குட்டி
முன்கால் தூக்குது பூனைக்குட்டி
முகத்தைத் துடைக்குது பூனைக்குட்டி
பின்கால் குந்திப் பூனைக்குட்டி
பேசா திருக்குது பூனைக்குட்டி
எலியைப் பிடிக்கப் பூனைக்குட்டி
இரவில் பாயுது பூனைக்குட்டி
புலிக்குத் தெரியா மரம் ஏறும்
புதுமை கற்றது பூனைக்குட்டி
Super paaa good