காலம் நமக்கு தந்த வரம் பெண்களடி

பெண்ணின் பெருமை

மனிதராக பிறந்த ஆண், பெண் என அனைவருக்கும் முதல் தெய்வம் தாயான பெண் தான்.

அதனால்தான் ஒளவைப் பாட்டி அவர்கள் ‘தாயிற் சிறந்த கோவில் இல்லை‘ என்று அடித்துச் சொல்லி வைத்தார்கள்.

அப்பேர்ப்பட்ட பெண்ணை பார்த்து சில ஆடவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அடித்தும், துன்புறுத்தியும் கொடுமைப் படுத்துகிறார்கள்.

‘ஆண் இல்லாமல் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சொல்லிக் கொண்டு பெண்களிடம் சண்டை போடுகிறார்கள்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டும் இருந்தால் மனிதப் பிறவியே கிடையாது என்று ஆகிவிடும்.

ஆண்களால் பிள்ளைப் பெற்று தர முடியுமா?

ஆண்டவன் படைப்பிலே ஆண்களுக்கு வேறு உறுப்புகளும், பெண்ணிற்கு வேறு உறுப்புகளும் வைத்து படைத்திருக்கிறார். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் வாழ்க்கை.

உலக மக்கள் தொகை மொத்தத்தில் 100 பேர் என்றால் பாதி பேர் ஆணாகவும், பாதி பேர் பெண்ணாகவும் தான் இருக்கிறார்கள்.

2% அல்லது 3% வித்தியாசமாக இருக்கலாம். அதிக வித்தியாசம் இல்லை என புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.

சில தாய்மார்களே பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி ஸ்கேன் பார்த்து கருவிலே அழித்து விடுகிறார்கள்.

சிலர் பிறந்த உடன் விஷமருந்து (கள்ளிப்பால்) கொடுத்தும் கொன்று விடுகிறார்கள்.

இது மகா பாவமில்லையா?

நாமும் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து தானே பிறந்தோம் என டாக்டர்களும், பெண்களும் யோசிக்க வேண்டாமா?

ஆகையால் ஆண் குழந்தையாய் இருந்தாலும், பெண் குழந்தையாய் இருந்தாலும் பிறந்த குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

எல்லாம் அறிந்த இறைவன் ஆண், பெண் இருவரும் தேவை என அறிந்து யாருக்கு ஆண் குழந்தை, யாருக்கு பெண் குழந்தை கொடுக்க வேண்டுமென சரிபார்த்து தான் கொடுத்துக் கொண்டு வருகிறார்.

நாம் அதை அறிந்து கொண்டு குழந்தைகளை அன்போடு வளர்க்க வேண்டும்.


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.