மண்ணைப் போல பொண்ணுதான்னு
சொன்னது யாரடி? – இவள்
பொங்கி எழுந்திட என்னாகுமென்று
பதில் செல்லனும் நீயடி
தாய்மையின் வடிவம் பொண்ணுதான்
தப்பில்லை கண்மணி – அவ
தந்துவந்த தாய்பாலெல்லாம் வீரம்தானடி
தமிழ் வீரம் தானடி
பாய்ந்துவரும் பகைவரையும்
பல்லை உடைப்பாளடி – அவள்
பாடி ஆடிச் சிரிக்கும் போது
பைந்தமிழ் பெண்ணடி
கேடுகெட்ட சிலபேர் அவளை
திமிரானவள் என்றழைப்பர் – அவள்
அன்பிற்கென்றும் அடிமைதானென
உணர்ந்து கொள்ளடி
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)