விஜயேந்திரனின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு
பெற்றோர்
தலைமகன் துபாயில்
இரண்டாம் மகன் இத்தாலியில்
கடைக்குட்டி கத்தாரில்
இவர்களின் பெற்றோரோ
முதியோர் இல்லத்தில்
கல்வி
மொட்டோடு தென்றல் கோபம் கொண்டால்
மலருக்கேது இன்பம்
விண்ணோடு முகில் கோபம் கொண்டால்
மலைக்கேது இன்பம்
கல்வியோடு நாம் கோபம் கொண்டால்
பின் வாழ்க்கைக்கேது இன்பம்
அன்பு
அழகை பார்க்கும் காதலுக்கு ஆயுள் கிடையாது
நிறத்தை பார்க்கும் காதலுக்கு நிரந்தரம் கிடையாது
ஆடம்பரத்தை பார்க்கும் காதலுக்கு அன்பு கிடையாது
அன்பை மட்டும் காட்டும் காதலுக்கு அழிவென்பதே கிடையாது
நாள்
பணத்தை சேமிக்க முடியும்
பின்னால் வாழ்ந்து கொள்ளலாம் என்று
ஒரு நாளை சேமிக்க முடியாது
உண்மை
உண்மைகள் ஊமையாகலாம்
ஆனால் உறங்கி போகாது
பொய்கள் நிலைத்து நிற்கலாம்
ஆனால் ஒருபோதும் வெற்றி அடையாது
விஜயேந்திரன்
மறுமொழி இடவும்