பொங்கல் திருநாள்
எங்கள் திருநாள்
தமிழரின் கலாச்சாரம்
தலைநிமிரும் தரமான
தமிழர் திருநாள்
உழவர் பெருநாள்!
இனிக்கும் தேன் கரும்பு
சுவைக்கும் மனம் எறும்பு
பனியின் அழகில் குளிரும்
பொங்கல் கண்டு மிளிரும்
உழைத்த உழவரின் உற்சாகம்
உதவிய கால்நடைகளைக்
கொண்டாடும் பண்பாடும்
விளையாடும் கவிபாடும்
பொங்கலோ பொங்கல்…
கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்