வரிகளுக்காக
பூனைகள் போட்டுக் கொண்டன
பெருஞ்சூடு!
விவரமில்லா ஒப்பீடுகளில்
அளவீடுகள் மீற
பறக்க எத்தனிக்கும்
ஊர்க்குருவிகள்!
சுமைகளைத் தாங்கவியலா
அச்சாணிகள் முறிந்து போக
சாயங்களை அழிக்கிறதொரு
பெருமழை!
போலி வானத்தில்
மின்னும் நட்சத்திரங்களைக்
கடக்கிறது கற்பனை!
முயற்சியின் உறக்கத்தில்
அசட்டை
மங்கல் வெளிச்சம்!
கடலைக் குடைவதாய்
மலை தாண்டுகின்றன
வீண் மினுக்கங்கள்!
பூமி நீங்கி
பாதாளம் ஈர்க்கும்
தரமில்லாதொரு ஒப்பீடு
விழுங்கிப் போகிறது
அழகான விடியல்களை!
எஸ்.மகேஸ்
சென்னை
கைபேசி: 9841708284