பிறப்பினிலே பெருமை கொண்டது
பெண்மை குணம்
பிறப்புக்கே வழிவகுக்கும்
தாய்மை இனம்
பேதையாக இன்முகமாய் இளம் தளிரில்
மடந்தையாகி மற்றொருவர் மனம்தனிலே
அறிவு கொண்டு அரிவையாகி ஆணிவேராய்
அகிலம் காக்கும் தெரிவையாகி அன்னை ஆவீர்
குலத்துக்கே விளக்காய் சோதியாகி
இருளகற்றி பாரம் நீக்கும் பாவை ஆவீர்
மனை பாரம் போக்கிடவே சுமை தாங்கி
கண்ணாளன் இடமாக நீரும் கொள்வீர்
அரி அயன் அரன் இனத்தோர்
சரியாய் பாதி உம்மிடம் தான் தந்தனரே!
மாந்தர் தம்மை இழிவு செய்யும் மனிதர் மாள
காளியாகி மானம் கொள்வீர்
பெண்மை போற்றும் பாரதத்தில் நீர்
அன்னை ஆவீர்
தெவிட்டாத தமிழர் வணங்கும்
தெய்வம் ஆவீர்
பெண்மையைப் போற்றும்
பெருங்குணம் உடைத்தோர் பெருமை வாழ்க
பெண்கள் இல்லா வாழ்வே இல்லை
மகளிர் வாழ்க!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
மறுமொழி இடவும்