வடக்கில் ஒருபக்கம்
முன்னாறு வீடுகள் கொண்ட கிராமம்,
முக்கிலுள்ள விநாயகருடன் சேர்த்து
முப்பது கோவில்கள்
களை பயிர் போல் பல சாதிகள்
பாவம் புண்ணியங்களுக்காக மட்டும்
வழிபாடு என்பதில்லாமல்
அன்பான மூன்று நாள் திருவிழா!
தெற்கில் ஒருபக்கம்
அரசியல் கூட்டத்தை வீழ்த்திய திரளோடு
பாண்டிய நகரமே கலைநிகழ்ச்சியுடன்
சந்தனக் குங்கும வாசனையிலும்
இஸ்லாமியரின் மோரிலும்
கிறிஸ்துவரின் அன்னதானத்திலும்
மிதக்கும் தூங்காநகரத்து வரலாற்று திருவிழா!
இதை விட இன்னும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்பதற்கு
உதாரணம் தெரியவில்லை எனக்கு
மு.செந்தா
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!