இத்தனைக்குப் பிறகும் என்னவோ தெரியவில்லை
என் மனம் உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறது
ஆனால் நான் எந்தக் காரணத்தைச் சொன்னாலும்
அதனை ஏற்றுக் கொள்ளவும் மறுத்திடுவாய்
என்று எனக்குத் தெரியும்
ஆனாலும் என் மனம் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறது
எப்போதெல்லாம் நான் தனிமையை உணர்கின்றேனோ
அப்போதெல்லாம் என் மனம்
உன்னைத் தான் தேடுகிறது
சற்று உன்னிடம் இளைப்பாறிக் கொண்டு
மீண்டும் வாழ்க்கையில் தெம்பாக
நடை பயணம் தொடரலாம் என்று
என்ன செய்வது? எங்கு எங்கு தேடினாலும்
நீ கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும்
தேடுகிறது என் மனம்
எத்தனை முறை திட்டினாலும்
மனம் ஒருபோதும் திருந்துவது இல்லை
நான் போடும் வேலியை என் மனம்
எப்போதும் மீறிக் கொண்டே இருக்கிறது
வளர்கின்ற கொடியைப் போல
பற்றும் கம்பியை விட்டுத் தேடி அலைகிறது
எங்கேயும் பற்றிக் கொள்ள
உன்னிடம் ஓர் இடம் கிடைக்காதா என்று
காற்றினில் மிதந்து கொண்டிருக்கிறது…
சதிஷ்ணா
உதவி பேராசிரியர்
அருணை மருந்தியல் கல்லூரி
திருவண்ணாமலை
கைபேசி: 8438574188
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!