பலரின் பொழுது போக்கு படிப்பதே!
காலங்கள் மாறவே எண்ணமும் மாறியதே!
புத்தகத்தினுள் புரட்சிகள் புதைந்து இருக்குமே!
பார்க்காத இடத்திலும் நம்மை நிறுத்துமே!
அதில் உள்ள வார்த்தைகள் நம்மை
உண்மை தன்மையை புரிந்திட வைத்திடுமே!
இன்றோ எவரோ பதிந்த கணினியில்
எத்தனை கருத்துகள் திணிக்கப்பட்டு வருகிறதோ?
உள்ளதைச் சொல்லிடும் புத்தகமே
மாற்றத்திற்கான திறவுகோல் ஆகுமே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246