புலன்களின் வழியாக சேகரிக்கப்படும் அனுபவங்களின் பதிவுதான் மனம், எண்ணம் மற்றும் சிந்தனை.
இன்று உங்களுக்கு கோபம், பயம் மற்றும் பதற்றம் வருகிறது என்றால் நேற்று உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை உள்வாங்கியதில் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்.
நேற்றைய அனுபவங்களை நீங்கள் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் தற்போது நல்ல அனுபவங்களை சேகரிக்க முடியும்.
தற்போதைய நிகழ்வுகளில் கவனம் செலுத்துங்கள். கிடைக்கும் அனுபவங்களை நேர்மறையாக மனதில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்தால் நாளைக்கு வரும் கோபம், பயம் மற்றும் பதற்றம் தவிர்க்கப்படும்.
கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ அலுவலக உதவியாளர்களோ இவர்கள் என் பேச்சை கேட்பதில்லை; என்னை மதிப்பதில்லை என்ற புலம்பல் உங்களிடம் இருந்தால் மாற வேண்டியது நீங்கள் தான்; மற்றவர்கள் அல்ல.
கணவன் (அல்லது மனைவி) என் பேச்சை கேட்கவில்லை என்பவர்களுக்கான ஆலோசனை இதுதான்.
குடும்பமோ, அலுவலகமோ இப்படி ஒருசூழலில் மற்றவர்களை நீங்கள் ஆளுமை செய்ய வேண்டுமெனில் உங்கள் மனச்சிந்தனையை நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
மனம் போன போக்கில் உங்கள் பேச்சு, செயல் இருந்தால் மற்றவர்களை நீங்கள் கையாள முடியாது. மற்றவர்கள் தான் உங்களை ஆளுமை செய்வார்கள்.
இன்னும் விளக்கமாக சொல்வதெனில் நான்குபேர் பேசிக் கொண்டிருக்கும் போது உங்கள் சிந்தனை மனம் போன போக்கில் அலைந்து கொண்டிருந்தால் மற்றவர்களின் பேச்சை உங்களால் கவனிக்க முடியாது.
இதனால் நான்கு பேருக்குள் நடந்த உரையாடலில் நீங்கள் உள்வாங்கியது குறைவாக இருக்கும் அல்லது தவறாக இருக்கும்.
இதுவே உங்கள் மனதை கட்டுபடுத்தி உரையாடலை கவனித்து இருந்தால் முக்கிய கருத்துகளை முழுவதுமாக உள்வாங்கி அதற்கேற்ப நீங்கள் செயல்படுவீர்கள். மற்றவர்களை நீங்கள் ஈர்க்கவும் முடியும்.
கணவனோ, மனைவியோ, சக பணியாளரோ இவர்களை நீங்கள் ஆளமை செய்ய நினைத்தால் முதலில் அவர்களின் செயல்களையும் பேசுவதையும் கவனியுங்கள்.
உடலின் முக்கிய உறுப்புகளை இயக்குவது ஹார்மோன்கள்தான். இந்த திரவ வடிவிலான ஹார்மோன்களின் வீரியத்தை முடிவு செய்வது உங்களின் தற்போதைய சிந்தனைதான்.
மனம், எண்ணம், சிந்தனை இவைகள்தான் ஹார்மோன்களை இயக்குகின்றன. உங்களிடம் யாராவது சத்தமாகவோ, கோபமாகவோ, பொறாமையாகவோ பேசினால் அவர்கள் தற்போது கெட்ட அனுபவங்களை உள்வாங்குகிறார்கள் என்று நினைத்து கொள்ளுங்கள்.
இந்த கெட்ட அனுபவம் நாளைய சிந்தனையை தீயதாக மாற்றி அவர்களின் ஹார்மோன்களின் வீரியம் குறைந்து உறுப்புகள் பலவீனமாகி அவர் நோயாளியாக மாற போகிறார் என்று பொருள்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!