அந்த அரசனுக்கு அகந்தை அதிகம்
தன்னைச்சுற்றி உள்ளவர்கள் வானாளவப்
புகழ்ந்து கொண்டேயிருக்க
அந்தப் போதையிலேயே அவன் மிதக்க
ஒரு புலவன் மட்டும் அரசனை புகழ்ந்து பேசாது
மெளமாக இருக்கக் கண்டு வெகுண்டு
அப்புலவனை நாடு கடத்த கட்டளையிட்டான்
பின் இப்போதாவது என்னைப் புகழ்ந்து பாடு
தண்டனையை ரத்து செய்கிறேன்
என கெஞ்சினானாம்
அதுவரை மெளனமாக இருந்த புலவன்
அப்போது வாய் திறந்து
‘மன்னா நீ கடவுளைவிடப் பெரியவன்
கடவுளால் எவரையும் நாடு கடத்த இயலாது
ஏனெனில் அவன் நாடு கடத்த வேறு நாடு கிடையாது
எனவே நீ மிகப்பெரியவன்’ என்றாராம்
நம் பணிச்சூழலிலும் இந்த அரசனைப்
போன்ற சிலரைக் காணலாம்
தானே பெரியவன்
தனக்குத் தெரியாமல் யாரும்
எதையும் செய்யக் கூடாது
தன்னைப் புறந்தள்ளி எவரும் பணி
செய்ய இயலாது என்ற
மனநிலையில் இருப்பவர்களைக்
கண்டு நாமும் சொல்லலாம் தானே…
“அய்யா நீர் கடவுளைவிடப் பெரியவர் என்று!”
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
திரண்டதோர் செல்வமென்ன
கண்ணதாசன் வரிகள் தான் நினைவுக்கு வருகிறதோ?
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!