முக்கிய நிகழ்வுகள் 2016

முக்கிய நிகழ்வுகள் 2016 – 2016ம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் என்ன என்று பார்ப்போம்.

ஜனவரி – 2016

ஜனவரி 11 – ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கொடுத்த அனுமதிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

ஜனவரி 16 – ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை பிரதம மந்திரி நரேந்திர மோடி வெளியிட்டார்.

ஜனவரி 17 – ஹைதராபாத் பல்கலைகழக வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்.

ஜனவரி 25 – சென்னை அடையார் புற்று நோய் மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா பத்ம விபூசண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஜனவரி 30 – காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டன.

 

பிப்ரவரி – 2016

பிப்ரவரி 03 – தமிழகத்தைச் சேர்ந்த நான்கு ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 19 வீரர்கள் சியாச்சின் பனியாறில் மூழ்கி இறந்தனர்.

பிப்ரவரி 12 – டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் தேசதுரோக வழக்கில் போலீஸ் காவலில் வைத்து மூன்று நாட்கள் விசாரணை செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிப்ரவரி 20 – தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

 

மார்ச் – 2016

மார்ச் 07 – இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் மூலம் பிறந்த குழந்தையான ஹர்ஷா சௌதா ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

மார்ச் 11 – 2000 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பேருந்தில் மூன்று மாணவர்களை உயிருடன் எரித்த வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுட்கால தண்டனை அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

மார்ச் 31 – கல்கத்தா மாநகரில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாலம் உடைந்து விழுந்ததில் 26 பேர் இறந்தனர். 88 பேர் காயம் அடைந்தனர்.

 

ஏப்ரல் – 2016

ஏப்ரல் 04 – காஷ்மீரின் முதல் பெண் முதலமைச்சராக மெகபூபா முஃப்தி பதவியேற்றார்.

ஏப்ரல் 05 – இந்தியாவின் அதிக வேக ரயிலான காத்திமான் எக்ஸ்பிரஸ் இரயிலை டெல்லியில் பிரதம மந்திரி நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

ஏப்ரல் 08 – மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி பகவான் கோவிலில் பெண்கள் நுழையக் கூடாது என்று 400 ஆண்டுகள் இருந்த தடை நீக்கப்பட்டது.

ஏப்ரல் 10 – கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் பரவூரில் உள்ள புட்டிங்கல் தேவி ஆலயத்தில் நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 109 பேர் இறந்தனர். 1090 பேர் காயம் அடைந்தனர்.

ஏப்ரல் 19 – ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது.

 

மே – 2016

மே 01 – வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

மே 16 – தமிழக சட்டசபைத் தேர்தலில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாயின.

மே 19 – அஇஅதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. 26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைபற்றியது.

புதுச்சேரியில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

மே 23 – தமிழகத்தின் முதல்வராக ஆறாவது முறையாக செல்வி ஜெயலலிதா பதவியேற்றார்.

மே 31 – மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் ஆயுதக்கிடங்கில் நடைபெற்ற வெடி விபத்தில் 19 பேர் இறந்தனர்.

 

ஜூன் – 2016

ஜூன் 06 – காங்கிரஸ் தலைவர் வி.நாராணயசாமி புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார்.

ஜூன் 07 – தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.

ஜூன் 08 – பி.ராமமோகனராவ் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஜூன் 18 – ஆவணி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஆகியோர் இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானிகளாக பதவியேற்றனர்.

ஜூன் 22 – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 1288 கிலோ எடை கொண்ட 20 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் ஏவி சாதனை புரிந்தது.

ஜூன் 24 – இன்போஸிஸ் நிறுவனத்தில் மென்பொறியளராக பணிபுரிந்த எஸ்.சுவாதி நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சாதகமாக அந்நாட்டு மக்கள் வாக்களித்தனர்.

ஜூன் 27 – ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்த 34 நாடுகளில் ஒன்றாக இந்தியா இணைந்தது.

 

ஜூலை – 2016

ஜூலை 10 – கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலை செயல்பாட்டுக்கு வந்தது.

ஜூலை 11 – குஜராத் மாநிலத்தில் பசுவின் தோலை உரித்தற்காக நான்கு பேர் சாட்டையால் அடித்து அவமானபடுத்தப் பட்டனர்.

ஜூலை 22 – சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேர்களுடன் சென்ற விமானம் கடலில் விழுந்து காணாமல் போனது.

ஜூலை 27 – இராமேஸ்வரத்தில் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு இராமன் மகசசே விருது அறிவிக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் – 2016

ஆகஸ்ட் 01 – மாநிலங்கள் அவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆகஸ்ட் 03 – மாநிலங்களவை சேவை மற்றும் மதிப்புக்கூட்டு வரி சட்டத்தை நிறைவேற்றியது.

ஆகஸ்ட் 08 – சேவை மற்றும் மதிப்புக்கூட்டு வரி சட்டம் மக்களவையில் நிறைவேறியது.

ஆகஸ்ட் 09 – சேலம் சென்னை விரைவு இரயில் பெட்டியில் பணத்தைக் கொண்டு சென்ற போது திருடர்கள் பெட்டியின் மேலே துளையிட்டு 5.78 கோடி ரூபாயைத் திருடிச் சென்றனர்.

மணிப்பூரின் இரும்புப் பெண்மணி சர்மிளா தனது 16 ஆண்டு கால உண்ணா விரதத்தைக் கைவிட்டார்.

ஆகஸ்ட் 19 – பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் இறகுப் பந்தாட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆகஸ்ட் 21 – பிரான்ஸ் அரசு நடிகர் கமலஹாசனை செவாலியர் விருதுக்கு தேர்வு செய்தது.

ஆகஸ்ட் 22 – எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் கவிதைகளை புதுடெல்லியில் வெளியிட்டார்.

 

செப்டம்பர் – 2016

செப்டம்பர் 01 – தமிழக பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பினை ஒன்பது மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

செப்டம்பர் 02 – மகாராஷ்டிர ஆளுநர் வித்தியாசாகர் ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

செப்டம்பர் 04 – அன்னை தெரசா புனிதராக போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார்.

செப்டம்பர் 06 – உச்ச நீதி மன்ற உத்திரவுப்படி கர்நாடக அரசு 15000 கனஅடித் தண்ணீரை காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட முடிவு செய்தது.

தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் உருவானது.

ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவியேற்றார்.

செப்டம்பர் 09 – கர்நாடகாவில் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

செப்டம்பர் 10 – மாற்றுத் திறனாளி மாரியப்பன் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் டி42 பிரிவில் தங்கம் வென்றார்.

செப்டம்பர் 12 – பெங்களுரில் காவிரி பிரச்சினை காரணமாக வன்முறை வெடித்தது.

தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

செப்டம்பர் 14 – ஏர்செல் நிறுவனத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

தேவேந்திர ஜஜாரியா பாராலிம்பிக்கில் ஈட்டி எறியதல் எஃப் 46 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

செப்டம்பர் 16 – காவிரிப் பிரச்சினைக்காக தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

செப்டம்பர் 18 – சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

செப்டம்பர் 21 – தனியாக இரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்தி விட மத்திய அரசு முடிவு செய்தது.

செப்டம்பர் 22 – தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செப்டம்பர் 27 – இஸ்லாமாபாத்தில் நடைபெற இருந்த 19-வது சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க முடிவு செய்தது.

செப்டம்பர் 28 – இரண்டு இந்திய மீனவர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலியர்களை இந்திய கடல் எல்லை அதிகாரத்தை நிர்ணயிக்கும்வரை இத்தாலியில் தங்கிக் கொள்ள இந்திய உச்ச நீதி மன்றம் அனுமதி அளித்தது.

செப்டம்பர் 29 – இந்திய அரசு பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.

 

அக்டோபர் – 2016

அக்டோபர் 02 – பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் மதுவிலக்குச் சட்டத்தை அறிமுகம் செய்தார்.

அக்டோபர் 10 – தமிழக முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அனைத்து துறைகளும் நிதி அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு மாற்றப்பட்டன.

அக்டோபர் 23 – அரியானா மாநிலத்தின் குர்கான் நகரத்தின் பெயர் குருகிராம் என மாற்றம் செய்யப்பட்டது.

அக்டோபர் 22 – கபடி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஈரானைத் தோற்கடித்து கோப்பையைக் கைபற்றியது.

அக்டோபர் 26 தமிழ்நாட்டில் தனியார்கள் சட்டக்கல்லூரிகள் ஆரம்பிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்தது.

 

நவம்பர் – 2016

நவம்பர் 08 – பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிப்பு செய்தார்.

நவம்பர் 09 – டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

நவம்பர் 13 – புதிய 500 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது.

நவம்பர் 16 – ஜல்லிக்கட்டை தடை செய்து 2014-ல் விதித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

நவம்பர் 20 – கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பின்னனிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய திரையுலக பிரமுகர் என்ற விருது வழங்கப்பட்டது.

நவம்பர் 22 – தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத் தேர்தலில் மூன்று தொகுதிகளையும் அதிமுக கைபற்றியது.

நவம்பர் 25 – கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்.

நவம்பர் 30 – திரையரங்குகளில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

டிசம்பர் – 2016

டிசம்பர் 05 – தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.

டிசம்பர் 06 – ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டார்.

டிசம்பர் 07 – துக்ளக் ஆசிரியர் சோ.இராமசாமி காலமானார்.

டிசம்பர் 12 – வர்தா புயல் சென்னையைத் தாக்கியது.

டிசம்பர் 18 – ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா பெல்ஜியத்தைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

டிசம்பர் 21 – தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன்ராவ் இல்லத்தில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

டிசம்பர் 22 – கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.அஸ்வின் வென்றார்.

டிசம்பர் 31 – வி.கே.சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.