காகம் ஒன்று காட்டிலே
தாகத்தினால் தவிக்கவே
வீட்டுப் பக்கம் வந்தது
ஜாடி ஒன்றைக் கண்டது
அந்த ஜாடி நடுவிலே
கொஞ்சம் தண்ணீர் இருக்கவே
சின்ன சின்ன கற்களை
பொறுக்கிப் பொறுக்கிப் போட்டதாம்
காகம் செய்த யுக்தியால்
தண்ணீர் மேலே வந்ததாம்
தாகம் தீரக் குடித்ததாம்
களைப்பு தீர்ந்து பறந்ததாம்
பாடலின் கருத்து: முயற்சி திருவினை ஆக்கும்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!