உன் மெளனம் உடைத்தால்

மெளனம் உடைத்தால் – கவிதை

மொட்டே நீ மெளனம் உடைத்தாய்

மலரென விரிந்து மணம் கொடுத்தாய்

 

வித்தே நீ மெளனம் உடைத்தாய்

விருட்சமாய் எழுந்து விரிந்து கிடந்தாய்

 

கத்தும்கடலே நீ மெளனம் உடைத்தாய்

கதிரவன் ஒளியால் உலகை நிறைத்தாய்

 

சுத்தும் புவி நீ மெளனம் உடைத்தாய்

பூகம்பம் என்றொரு வடிவம் எடுத்தாய்

 

புத்த‌ன் போல் இருக்கும் இயற்கை

தன் மெளனம் உடைத்திட

பெருந்துயரே பெருகும்

உணர்வாய் மனிதா!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942