இந்திய மேலாண்மைக் கழகம்,பெங்களூரு

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் 75 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 10 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2019-ஆம் வெளியிடப்பட்ட மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு 81.34 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி 59.15 14
2 இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 58.40 15
3 தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி 55.57 17
4 கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட், சென்னை 55.09 18
5 லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், சென்னை 48.26 36
6 பி.எஸ்.ஜி காலேஜ் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 47.58 37
7 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 45.75 43
8 வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை 45.13 46
9 பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், திருச்சிராப்பள்ளி 43.91 53
10 எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,சென்னை 40.05 73

 

இந்திய அளவில் தமிழக மேலாண்மை கல்லூரிகள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து தக்க வைக்கவும் இன்னும் முன்னேறவும் முயற்சி செய்ய வேண்டும்.

வ.முனீஸ்வரன்

 


Comments

“மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசை 2019” மீது ஒரு மறுமொழி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.