விலையுயர்ந்த வைரக்கல் தான்
எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…
இழப்பு வைரத்திற்குத் தானே தவிர
அம்மிக் கல்லுக்கல்லவே
நாம் வைரக்கற்களெனில்
சாதாரணமான அம்மிக் கற்களை
போட்டியாக நினைக்கக் கூடாது
மாறாக கீரீடத்தின் மேலேறவே
ஆசைப்பட வேண்டும்.
உன் நண்பனைச்சொல்
உன்னைப் பற்றிச் சொல்கிறேன்
இது பழமொழி…
உனக்கான போட்டியாளரைச் சொல்
உன் தகுதியைக் குறித்து நான் சொல்கிறேன்
இது வெற்றியாளர்களின் புது மொழி…
பிதாமகர் பீஷ்மர்
ஒரு போதும்
பெண்களுடன் போர் புரிந்ததில்லை
இது பாரதக்கதை
நாமும் தகுதியானவர்களுடனே
போட்டியிடவேண்டும் பிறவற்றைத்
தள்ளி விட வேண்டும்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்