அங்கேயும் இங்கேயும் அலையுது–லஞ்சம்
ஆட்டிப் படைச்சி சிரிக்குது
பிஞ்சுல வெம்பிய பழத்தைப் போல
பலனில் லாமலே இருக்குது
கல்வியைக் கூடகாசுக் கென்றே
கச்சிதமாக விலை பேசுது
சொல்லிட முடியா துயரம் என்றே
தொடர்ந்து நம்மை விரட்டுது
இல்லாத சட்டம் பேசுது – உண்மை
இல்லை என்றே அது கூறுது
வில்லை உடைச்ச ராமனைக் – கூட
விலைக்கு பேச வைக்குது
பல்வேறு வடிவம் தாங்குது–நோயென
பரவி எங்கும் தழைக்குது
இல்லாத மக்களின் வாழ்வைத் – தினமும்
இரக்க மின்றியே அழிக்குது.
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)