வங்கி நடப்புக் கணக்கு

நடப்புக் கணக்கு என்பது வங்கியில் தினசரி வரவு செலவு செய்யும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களால் துவக்கப்படும் கணக்கு ஆகும்.

இந்தக் கணக்கில் நாம் வங்கியில் வைத்திருக்கும் பணத்திற்கு வட்டிக் கிடையாது.

நடப்புக் கணக்கு வியாபாரம் செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தக் கணக்கில் எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம், எடுக்கவும் செய்யலாம். காசோலையைப் பயன்படுத்தியும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தியும் இந்தக் கணக்கைப் பராமரிக்கலாம்.

சேமிப்புக் கணக்கில் ஒரு வருடத்திற்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக செலுத்தினால் வருமானவரிப் பிரச்சினைகள் வரலாம். எனவே வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள் நடப்புக் கணக்கை ஆரம்பித்து அதிலே ரொக்கமாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம். சேமிப்புக் கணக்கைத் தொழில் மற்றும் வியாபாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது, நடப்புக் கணக்கு தான் நல்லது.

நடப்புக் கணக்கு வைத்திருந்தால் நமக்கு வட்டி கிடைக்காது என்றாலும் நாம் நடப்புக் கணக்கை நன்கு பராமரித்து வந்தால் வங்கியிலிருந்து எளிதில் கடன் கிடைக்கும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.