கணக்கில் அடங்கா வண்ணங்கள்
வண்ணமயமாக்கும் எண்ணங்களை,
வெளிச்சத்தில் தான் எத்தனை நிறங்கள்,
இருளிலோ நிறத்திற்கு வழியேது?
வெறுந்தாளும் விலை பேசும்
வண்ணங்களால்!!
பணத்தாளும் வெறுந்தாளாகும்
வண்ண மின்றி!!
வானம் கொண்ட வானவில்தான் எத்தனை அழகு
வண்ணம் இன்றி வானவிலுக்கு ஏது அழகு?
ரசனைமிக்க ஓவியமும் ரம்மியமாகும் தான்
கொண்ட வண்ண பூச்சுக்களால்.
ஆயிரம் அர்த்தங்கள் பேசும் வண்ணங்கள்
சொல்லும் உணர்வுகள் தான் எத்துணை..
காந்த பார்வை போல் காந்த நிறத்தால்
கவர்ந்திழுக்கும் தந்திர வண்ணமோ?
ஆயிரமாயிரம் வண்ணங்கள் இருந்தும்
கருப்பு வெள்ளைக்கு மட்டும் பகையேது
உயிர்கொண்டு எழுந்தால் வண்ணமும் வருந்துமோ
தான் பிறந்ததற்கு..
வண்ணத்தை வாத அரங்காக்கியது யாரோ?
உண்மை மறைத்து சாயம் பூசி வாழும் மானிடரோ?
சிந்துதாரணி சக்திவேல்,
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!