வண்ணத்துப்பூச்சி!

வண்ணத்துப்பூச்சி

வண்ணத்துப்பூச்சி எந்த மலரையும் காயப்படுத்தியதில்லை

வண்ணத்துப்பூச்சி தேன் தராத

மலர்களையும் குறை சொன்னதில்லை

வண்ணத்துப்பூச்சி தன் வண்ணங்களை நினைத்து

எப்போதும் தலைக்கனம் கொண்டதில்லை

வண்ணத்துப்பூச்சி எப்போதும் சத்தமிட்டு

பறந்ததாக சரித்திரம் இல்லை

வண்ணத்துப்பூச்சி வாழும் வரை ஒருபொழும்

சலித்துக் கொண்டதே இல்லை

பிறர்க்குத் தீங்கின்றி

பிறர் குறித்து அவதூறின்றித்

தான் குறித்து தலைக்கனம் (கர்வம்) இன்றி

எப்போதும் கிடைத்ததை ரசிக்கவும்

ருசிக்கவும் கற்றுக்கொண்டால்

நாமும் வண்ணத்துப்பூச்சி போல்

நல்ல வண்ணம் வாழலாம்…

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

Visited 1 times, 1 visit(s) today