மானுடத்தின் வாச மற்ற பகுதிகளில்
வாழ்வியலை நடத்தவே விழைகிறது வனம்
மழை கடந்த மணித் துளிகளுக்குப் பின்
அசைத்து விட்டுப் போகும் காற்றில்
அற்புத மழை ஒன்றை நிகழ்த்தி காட்டுகிறது
வானமற்ற மழையை அந்த வனம்
பிடரி சிலிர்த்துப் பேய்த் தாக்குதல் நடத்தும்
சிங்கத்தின் கர்ஜனையில் எழும்
இடி ஓசையை வியாபிக்கிறது
மேகமற்ற மோதலை அந்தக் காடு
பதுங்கிக் கொண்ட பகலை தேடும்
இரவு நேரத்தில் இலைகளின் அடர்த்தியின்
துவாரங்களில் பூக்கிறது நட்சத்திர மின்மினிகள்
வானத்திற்கு கீழே
வனத்துக்குள் கொஞ்சம் வானமாக

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
பதுங்கிக் கொண்ட பகலைத் தேடும்
இரவு நேரத்தில் இலைகளின் அடர்த்தியின்
துவாரங்களில் பூக்கிறது நட்சத்திர மின்மினிகள்
வானத்திற்குக் கீழே
வனத்துக்குள் கொஞ்சம் வானமாக
சிறப்பான நயமான கவிதை வரிகள்.
கவிஞருக்கு வாழ்த்துகள்!