தேகங்கள் சிலிர்க்க திடீரென வலி வந்ததம்மா
பாதங்கள் நடக்க பாதுகாப்பாய் இருக்க தோணுதம்மா
முளைத்த சிறகுகள் சீக்கிரமே உடைந்ததம்மா
வெட்டவெளி எல்லாம் வெட்கமாய் தெரியுதம்மா
வட்ட நிலவு எல்லாம் வளர் பிறைக் கோலமாய்
கட்டைவிரலில் ஆனதம்மா
மஞ்சள் நிலத்தில் குங்குமமாய் சிந்தும் அம்மா
பச்சை முட்டையும் பதமாய் நல்லெண்ணயும் போதும் அம்மா
காட்டாற்று வெள்ளத்திற்கு சடங்குகள் இல்லையம்மா
எந்த மாதம் வந்தாலும் அம்மனுக்கு தீட்டு இல்லையம்மா
பூமியை நீ சுமந்திட பூர்வஜென்ம புண்ணியம்மா
கண்ணெல்லாம் இருட்டும்மா, வலி சொல்ல வார்த்தை இல்லையம்மா
காசெல்லாம் இல்லையம்மா கந்தை இருக்குது போதும் அம்மா
பத்து வயது பெண்ணம்மா பத்திரமாய் இருக்கனும்மா
அம்மா இல்லையேம்மா
இம்மாதமும் அப்பாவிடமே சொல்லிடம்மா
மு.தனஞ்செழியன்
பாக்கம்–602024
8778998348, 9840607954
dhananchezhiyan.mphil@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!