உண்மையை உரைத்துக் கூறிடும்
உரைகல் இல்லாததால்
நேர்மையும் நாணயமும்
நிர்க்கதியாய்ப் போக
அசிங்கப்படுத்தும்
அற்பர்களிடம் அகப்பட்டு நிற்கையில்,
வேலிபோல் சூழ்ந்து
வேடிக்கை மட்டுமே பார்த்திடும்
மனிதர்கள் நிறைந்த
மண்ணுலகில்,
செய்த தர்மம் மட்டுமல்ல
ஆற்றிய நற்காரியங்களும்
தலை காத்திடும்!
ஒருவரின் நற்பெயருக்கு
சான்றாவது அன்னாரின்
ஒழுக்க நெறிகளே!
அவமானங்களைக் கடந்தும்
அவைகளே ஊன்றுகோலாய்த்
தாங்கி நிறுத்திடும்!
இங்கு
உளி அதிகம் பதம் பார்த்த
கற்கள் மட்டுமல்ல,
வலிகள் அதிகம் பதம் பார்த்த
மனங்களும் புனிதமாகும்!
அதுவரை
வலிமை கொள் மனமே!!
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!