வானவில் – கவிதை

வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!

உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?

ஏதாவது யுத்தம்
நடக்கிறதா என்ன?
வானம் உன்னைத்
தூதனாக அனுப்பியுள்ளதே
பூமிக்கு!

மழை வேண்டும் என்று
காத்திருக்கிறோம் நாங்கள்!
மழை விடும் என்று
காத்திருக்கிறாய் நீ!

வாகனங்கள் ஓடாத
அந்தப் பாலத்தின் மீது
பூமிக்கு எதைக் கொண்டு செல்ல
நினைக்கிறது வானம்?

வானமே! நீ வில்லை
மட்டும் அனுப்பி
பிரயோஜனமில்லை…
மன்மதனிடம் அம்பையும்
யாசித்து அனுப்பி வை!
அப்போதுதான் பூமி
உன்னைக் காதலிக்கும்…

ரோகிணி கனகராஜ்

One Reply to “வானவில் – கவிதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.