வார்த்தைகள் தம்மை விதைகளாக்கியே
வாழ்க்கைப் பாதையை மாற்றிக் காட்டுவோம்!
தீர்ந்திடும் துயரமே தொலைந்திடும் வறுமையே
திசை எட்டிலும் அன்பெனும் பூக்கள் மலருமே!
கார்முகில் தருகின்ற மழையினைப் போலவே
கனிந்த வார்த்தையை நாமும் பேசியே
சேர்ந்திடும் நட்பினை நிலைபெறச் செய்தே
சோர்வினை துரத்திட சுகமும் பெருகிடுமே!
வேர்தரும் நீர்தான் மரங்களுக்கு அழகாம்
விதைதரும் கனியே வாழ்வினுக்கு அழகாம்
ஏர்முனை குடைவதே மண்ணுக்கு அழகாம்
ஏற்ற வார்த்தையே பேசுதல் சிறப்பாம்!
நாற்றென நல்லவை மனதில் நடவுசெய்
நயமென சிறந்த சிந்தனை பயிர்செய்
ஊற்றென நாவினில் விளைந்திடும் வார்த்தையே
உலகினை மாற்றிக் காட்டிடும் உண்மையே!
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)