வாழ்க்கையின் வழிகாட்டி
வெங்காயம் வெள்ளைப் பூண்டு.….
விரும்பிய நிகழ்வினை
கரும்பென இனிக்கும் அன்பினை
திரும்பிப் பார்த்து மகிழ்ந்திடத்
தேவை பூண்டின் நற்குணம்!
விரும்பிடாத செயல்களை
வழுக்கி விழுந்த இடங்களை
மனதிலிருந்து அகற்றிட
தன் சருகினை உதிர்திடும் வெங்காயம்
சரியாய் கற்றுத் தந்திடும்!
நல்லதைப் பெருக்கி
அல்லதை விலக்கி
வாழும் போது மகிழ்ச்சி நிலைக்கும்
மனம் மலர்ந்து சிரிக்கும்!
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்