வாழ்க்கைத் தத்துவங்கள்!

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்; வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.

நீ சிரித்துப் பார்!

உன் முகம் உனக்குப் பிடிக்கும்.

மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்.

உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்!

உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை.

உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒருநபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம்.

கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் அவன் என்பதே அர்த்தம்.

குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.

Visited 1 times, 1 visit(s) today