அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
வன்மங்கள் வளர்வதேனோ? கன்மங்கள் பிறப்பதேனோ?
அன்பெல்லாம் குறைவதாலோ? தன்னிலை மறப்பதாலோ?
தனியொரு ஒழுக்கம் தன்னால் நன்மைகள் சேரும் அன்றே !
இனியொரு இழுக்குமில்லா வாழ்ந்திடல் வேண்டும் நன்றே!!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
Visited 1 times, 1 visit(s) today